ஆனால் படம் முழுக்க மொத்தம் ஆறுவிதமான தோற்றங்களில் வருகிறார் ஷாம். இந்தப்படம் தான் தனது எதிர்கால திரையுலக வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பணத்துடன் தனது முழு உழைப்பையும் நம்பிக்கையையும் இந்தப்படத்தில் கொட்டியிருக்கிறார் ஷாம்.
இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த ‘நான் ஈ’ சுதீப் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினாராம். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 6 மெழுகுவர்த்திகள் சூப்பர் படம். ஷாமின் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. அவருடைய கடின உழைப்பு இந்தப்படத்தில் தெரிகிறது” என பாராட்டியுள்ளார் சுதீப்.
https://sitetestcomment.com