’விக்ரம்’ படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன்


உலக நாயகன் கமல்ஹாசன் நவம்பர் 7 ஆம் தேதி தனது 66 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக அவரது ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு அவருடைய பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று (நவ.01) ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஃபஹத் பாசில், நடன இயக்குநர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

bahath fazilkamal birthday celebrate in vikram shootingkamal birthday celebrationKamal Hassanlogesh kanakarajMahendrantamil movie vikramulaga nayaganVikramvikram shooting spot