சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக கே.திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.

இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர்.

படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஜானிலால் மற்றும் செவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எல்.வி.முத்து பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு விஷால் பீட்டர் இசையமைத்துள்ளார். அந்தோணி படத்தொகுப்பு செய்ய, என்.எம்.மகேஷ் கலையை நிர்மாணித்துள்ளார். ராதிகா நடன காட்சிகளை வடிவமைக்க, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

actor jaiJaiKollywood Newsmovie news breaking news