’சபாபதி’ விமர்சனம்


நடிகர்கள் : சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், ரமா, ஷாயாஜி சிண்டே, வம்சி, புகழ் மற்றும் பலர்
இசை : சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம்
இயக்கம் : சீனிவாச ராவ்
தயாரிப்பு : சி.ரமேஷ் குமார்

திக்குவாய் பிரச்சனையுடன் இருக்கும் நடிகர் சந்தானம், தனது எதிர் வீட்டு பெண்ணான நாயகி ப்ரீத்தி வர்மாவை காதலிக்கிறார். வேலைக்கு போனால் தான் காதலி கிடைப்பார், என்பதால் வேலை தேடி அலையும் சந்தானத்திற்கு, அவருடைய திக்குவாய் பிரச்சனை தடையாக இருப்பதோடு, அதனால் அவமானங்களையும் எதிர்கொள்ள, திடீரென்று சந்தனாம் வாழ்க்கையில், அரசியல்வாதியின் பல கோடி பணம் மூலமாக விதி விளையாட, அதனால் அவருடைய வாழ்க்கை என்னவாகிறது என்பதே ‘சபாபதி’ படத்தின் மீதிக்கதை.

திக்குவாய் குறைபாடுள்ள வேடத்தில் சந்தானம் மிக சிறப்பாக நடித்துள்ளார். தனது ரெகுலரான கலாய்க்கும் வசனங்கள் இல்லாமல், உடல் அசைவுகள் மூலமாக நம்மை குளுங்கி குளுங்கி சிரிக்க வைப்பவர், இதுவரை பார்த்திராத சந்தானத்தை தனது நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார். வெகுளித்தனமாக அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ரசிக்க வைப்பதோடு, விழுந்து விழுந்து சிரிக்கவும் வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி வர்மாவுக்கு நடிக்க வாய்ப்பே இல்லை. பாடல் காட்சிகளில் மட்டும் அங்கும், இங்கும் நடப்பது தான் அவருடைய வேலையாக இருக்கிறது.

சந்தானத்தின் அப்பாவாக நடித்திருக்கு எம்.எஸ்.பாஸ்கார், வழக்கம் போல தனது வேடத்தை மிக நேர்த்தியாக செய்துள்ளார்.

வம்சி, ஷாயஜி சிண்டே, புகழ், ரமா என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது வேலையை முழுமையாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் விதி எப்படி விளையாடுகிறது, என்பதை காமெடி ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சீனிவாச ராவ், நல்லவர்களை சோதிக்கும் விதி, கடைசியில் அவர்களை கைவிடாது, என்ற மெசஜையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் இதுவரை பார்க்காத ஒரு சந்தானத்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. இது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில், ‘சபாபதி’-யை பார்ப்பவர்கள் சந்தோஷமடைவது நிச்சயம்.

director srinivasa raokollywood movie reviewKollywood NewsMS Baskarpreeti varmaPugazhramesh kumarsabhaapathi reviewSanthanamtamil movie sabhaapathi