’ஊமைச் செந்நாய்’ விமர்சனம்


நடிகர்கள் : மைக்கேல் தங்கதுரை, சாய் ராஜ்குமார், சனம் ஷெட்டி, கஜராஜ், ஜெயகுமார், அருள் டி.சங்கர்
இசை : சிவா
ஒளிப்பதிவு : கல்யாண் வெங்கட்ராமன்
தயாரிப்பு : லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ் (Life Goes On Picures)

துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் மைக்கேல் தங்கதுரை, பெரிய மனிதர்களை பின் தொடர்ந்து அவர்களின் ரகசியங்களை சேகரிக்கிறார். அமைச்சர் ஒருவரது முன்னாள் உதவியாளரை பின் தொடரும் போது, தனது நிறுவனம் தவறான வேலைகளை செய்வதை தெரிந்துக்கொள்பவர், அதன் பிறகு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் ‘ஊமைச் செந்நாய்’ படத்தின் கதை.

ஒருவருக்கொருவர் இழைக்கும் துரோகங்களும், அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும் பல திருப்புமுனைகளோடு சஸ்பென்ஸாக சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் மைக்கேல் தங்கதுரை அமைதியாக நடித்து கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, சண்டைக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

நாயகி சனம் ஷெட்டி, மைக்கேலுக்கு ஏற்ற ஜோடியாக இருப்பதோடு, மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்திலும், இயல்பான நடிப்பிலும் கவர்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெயகுமார், அருள் டி.சங்கர் என படத்தில் நடித்த அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், இசையமைப்பாளர் சிவா மற்றும் படத்தொகுப்பாளர் அதுல் விஜய் ஆகியோரது பணி திரைக்கதையின் சஸ்பென்ஸை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.

சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் படம் எடுக்க வேண்டும் என்பதை விட, அதை இயக்குநர் மிஷ்கின் பாணியில் சொல்ல வேண்டும், என்று இப்படத்தின் இயக்குநர் அர்ஜுனன் ஏகலைவன் நினைத்திருப்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.

கண்டய்னரில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சியில் விவசாய நிலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது.

குறிப்பிட்ட சில கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு இடையே நடக்கும் துரோகங்களை, நேர்த்தியான காட்சிகளோடு நிறைவான சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் படமாக கொடுத்ததில் இயக்குநர் அர்ஜுனன் ஏகலைவன் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ’ஊமைச் செந்நாய்’ முழுமையான சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் படம்.

actor Michel thangaduraiActress Sanam Shettyarjunan ekalaivandirector arjunan ekalaivanfilm reviewkollywood movie reviewoomai sennai reviewtamil movie oomai sennal review