
காமெடியில் அசால்ட் பண்ணும் வித்யுலேகா கடந்த வருடம் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்தவர், இந்தமுறை வேதாளம் படத்திலும் அஜித்துடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.. சமீபத்தில் அஜித்தை சந்தித்தபோது, பேஸ்புக், ட்விட்டர் இல்லாத வாழ்க்கை தான் சிறந்தது, அதனால் அவற்றை விட்டு விலக முயற்சி செய் என கூறினாராம்.
ஆனால் அவர் சொன்னதை தன்னால் கடைபிடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டுள்ளார் வித்யுலேகா.. ‘வேதாளம் படத்தில் கூட சூரி அஜித்திடம், “நீ பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப்னு எதிலாவது இருக்கியா” என கேட்க, இல்லை என பதில் சொல்வார் அஜித். “அதனால் தான் உன் முகம் ப்ரெஷ்ஷா இருக்கு” என்பர் சூரி. இதைத்தான் வித்யுலேகவிற்கும் சொன்னாரோ அஜித்..?
Comments are closed.