
அஜித்தின் படங்களை தொடர்ந்து தயாரித்துவரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மிக பிரமாண்டமான படங்களை தயாரித்தவர் தான்.. இடையில் சில படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகாததால் சரிவை சந்தித்தார். இப்போது அஜித் நடித்த படங்களை தயாரித்ததன் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டார்.
அந்தவகையில் அஜித்தை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து அவரது நெருங்கிய நண்பராகவும் இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, அஜித் படங்கள் மூலம் நல்ல நிலையை அடைந்தார். ஆனால் அதன் பின் அவர் தயாரித்த சில படங்கள் தடுமாறவே தயாரிப்பு தொழிலை தொடர்ந்து நடத்த சிரமப்பட்டார்.
இதனை அறிந்த அஜித் பழைய கருத்துவேறுபாடுகளை மறந்து தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளாராம். அனேகமாக இந்தப்படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்குவார் என தெரிகிறது.
Comments are closed.