கடந்த வருடம் நடந்த ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாராலிம்பிக்’ போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பயோபிக் என்ற ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை இயக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.
தமிழ், ஆங்கிலம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்துக்கு ‘மாரியப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை குக்கூ, ஜோக்கர் புகழ் ராஜு முருகன் எழுதுகிறார்

Comments are closed.