
கவனிக்கத்தக்க நல்ல கலையான முகம்.. அதே சமயம் நடிப்பும் நன்றாக வருகிறது.. கொஞ்சம் வலுவான கேரக்டர்கள் கிடைத்தால் ஐஸ்வர்யா தத்தாவுக்கு தமிழ் திரையுலகில் ஜொலிக்க வாய்ப்பு இருக்கிறது.. ஏற்கனவே ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படம் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்த இவர் சமீபத்தில் வெளியான ‘ஆறாது சினம்’ படத்திலும் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்..
இப்போது அடுத்தகட்டத்திற்கு நகரும் விதமாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது. சுந்தரபாண்டியன் புகழ் எஸ்.ஆர்.பிரபாகரன் விக்ரம் பிரபுவை வைத்து இயக்கவுள்ள இந்தப்படத்தில் ஏற்கனவே மஞ்சிமா மோகன் ஒரு கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.