சில வாரங்களுக்கு முன் தமிழில் ‘பட்டதாரி’ என்கிற படம் வெளியானது ஞாபகம் இருக்கலாம். இந்தப்படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்றாலும் அந்தப்படத்தில் நடித்த அதிதி மேனன் மட்டும் ஓரளவுக்கு பீல்டில் தேறிவிடுவார் என்றே தெரிகிறது.. இல்லாவிட்டால் அமீர் இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்ன..?
இந்தப்படத்திற்கான ஆடிசன் நடைபெற்றபோது அதிதியும் அதில் கலந்துகொண்டாராம்.. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் கோவையில் கல்லூரியில் படித்தவர் என்பதால் சரளமாக தமிழ் பேச தெரிந்தவர்.. அதனாலேயே அமீருக்கு இவரை பிடித்துவிட, அந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தந்தாராம். கூடிய சீக்கிரம் தமிழை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வேன் என்கிறார் அதிதி மேனன்.

Comments are closed.