தனுஷ் இயக்கிவரும் ‘பவர் பாண்டி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார் காமெடி நடிகை வித்யுலேகா.. வழக்கம்போல நகரத்து பெண்ணாக அல்லாமல் இதில் கிராமத்து பெண்ணாக வருகிறார்.. அதேசமயம் வெறும் காமெடி மட்டுமே அல்லாமல், கொஞ்சம் குணச்சித்திர தோற்றம் காட்டவும் செய்திருக்கிறாராம் வித்யுலேகா.
பொதுவாக தனுஷ் தான் நடித்த படங்களில் காமெடிக்காக ‘குண்டு’ ஆர்த்தியை சேர்த்துக்கொள்வது தான் வழக்கம்.. ஆனால் இந்தமுறை தான் இயக்கும் ‘பவர் பாண்டி’ படத்தில் வித்யுலேகா தான் சரியாக இருப்பார் என்பதால் அவரை அழைத்துள்ளார். இதுநாள் வரை தனுஷ் படத்தில் நடிக்காத வித்யுலேகாவிற்கு, தனுஷ் டைரக்சனில், அவருடனேயே சேர்ந்து நடிப்பதால் ‘ஒரே கலீல் இரண்டு மாங்காய்’ அடித்த் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
Comments are closed.