‘பேபி டால்’ படம் மூலம் இயக்குனராக மாறிய நடிகை…!

246

baby doll
சினிமா என்கிற கனவுத்தொழிற்சாலையில் பெண்களுக்கு கதாநாயகியாக, கவர்ச்சிப் பெண்களாக, துணை நடிகைகளாக, பாடகிகளாக, எப்போதுமே முன்னுரிமை உண்டு… இருந்தாலும் திரைப்பட துறையில் பெண்களால் உச்சத்தைத் தொட முடியும் என்கிற நம்பிக்கைக்கு ஆதாரமாக சில பெண் இயக்குனர்கள் அவ்வப்போது தங்கள் படைப்பின்மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள்.

கடந்த பத்து வருட காலங்களில் ப்ரியா, மதுமிதா, ஜே.நந்தினி, ஹலிதா சமீம், கிருத்திகா உதயநிதி என களம் இறங்கிய பெண் இயக்குனர்கள் வரிசையில் தற்போது நடிகை ஹாசிகா தத் இயக்குனராக மாறியுள்ளார். ஆம்.. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் படத்தில் ஹீரோயினாக நடித்த அந்த ஹாசிகா தத் தான் இப்போது ‘பேபி டால்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

முழுக்க முழுக்க காமெடி பாணியில் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன் என அதற்கு தோதாக வலுவாக கூட்டணி அமைத்துள்ளார். மானஸ் என்பவர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஹாசிகா தத்தே நடிக்கிறார். நேற்று பூஜையுடன் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments are closed.