ரசிகர்கள் என்பதையும் தாண்டி திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகளை கேட்டால் தாங்கள் ரஜினி ரசிகன் அல்லது ரசிகை என சொல்வதை இப்போதும் பார்க்கமுடியும். சிலர் மரியாதைக்காக அப்படி சொன்னாலும் பலரும் ஆத்மார்த்தமாக ரஜினி ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி உண்மையில் ரஜினி ரசிகையோ என்னவோ தெரியாது. ஆனால் தற்போது டிச-9ஆம் தேதி வெளியாகவுள்ள ‘எங்கிட்டே மோதாதே’ படத்தில் அவர் தீவிர ரஜினி ரசிகையாக நடித்துள்ளார். ராமு செல்லப்பா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நட்டியும் படத்தில் தீவிர ரஜினி ரசிகராம். நிஜத்திலும் அவர் தீவிர ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.