
கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ வரும் தீபாவளி தினத்தில் திரையரங்குகளை எட்டவிருக்கிறது.. சரித்திர பின்னணி முதற்கொண்டு மூன்றுவித காலகட்டத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், கார்த்தியின் மொட்டைத்தலை லுக்கே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.. நாளை இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்த நேரத்தில் ரத்னமாதேவி என்கிற ராணியாக இதில் நடித்திருக்கும் நயன்தாராவின் போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி இன்னும் ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது.. எப்படியோ அனுஷ்காவுக்கு ஒரு ருத்ரமாதேவி போல, நயன்தாராவுக்கு இந்த ரத்னமாதேவி’ அமையுமா.? பொறுத்திருப்போம் தீபாவளி வரை.
Comments are closed.