உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா..!

239

Actress Nayanthara Turns To Assistant Director

ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இருமுகன் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. பெரும்பாலான படங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தோமா, தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்ததும் கேரவனுக்குள் நுழைந்தோமா என்றுதான் பல நடிகைகளும் இருப்பார்கள்.. நயன்தாராவும் கூட அப்படி இருந்தவர் தான்.

இருமுகன் படத்தில் படமாக்கப்படும் காட்சிகளை பார்த்து ‘சரி..ஏதோ எடுக்கிறார்கள்’ என ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்தாராம் நயன்தாரா.. ஆனால் போகப்போக கதையும் படமாகும் காட்சிகளின் வீரியமும் அவருக்கு புரியத்தொடங்கியதாம். அதிலிருந்து ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் ஸ்பாட்டிலேயே நின்று அடுத்த காட்சிக்கு தேவையான விஷயங்களை ஒரு உதவி இயக்குனர் போல செய்ய ஆரம்பித்து விட்டாராம். கேரவன் பக்கமே எட்டிப்பார்க்கவில்லையாம்.

அப்படித்தான் ஒரு காட்சிக்கு முன்னதாக மணலில் வீடு கட்டிக்கொண்டிருந்த நயன்தாராவிடம் ‘என்னங்க பண்றீங்க’ என நாயகன் விக்ரம் கேட்டபோது, “படம் நல்லா வந்துட்டு இருக்குல்ல.. நானும் என் பங்கிற்கு ஏதாவது பண்றேனே” என ஆர்வமாக வேலை பார்த்தாராம் நயன்தாரா..

Comments are closed.