‘சிலந்தி’ ஆதியின் படப்பிடிப்பில் தண்ணீரில் மூழ்கிய ஹரிப்ரியா..!

147

haripriya
சில வருடங்களுக்கு முன் டிஜிட்டலில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் ‘சிலந்தி’ என்கிற படத்தை இயக்கி நல்ல லாபம் பார்த்ததோடு, அடுத்தடுத்து டிஜிட்டல் படங்கள் தைரியமாக உருவாக வழிகாட்டியவர் இயக்குனர் ஆதிராஜன். தற்போது இவர் ‘அதர்வணம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் விஜய ராகவேந்திரா இந்தப்படத்தின் மூலம் முதல்முதலாக தமிழில் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.. புனித் ராஜ்குமார், சிவராஜ்குமார் இவர்களின் மைத்துனரான இவர் கன்னடத்தில் கிட்டத்தட்ட 38 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Related Posts

சமீபத்தில் இந்தப்படத்திற்காக ஹரிப்ரியா நீசல் குளத்தில் விளையாடுவது போன்ற காட்சியை படமாக்கியுள்ளார்கள். இந்த காட்சியின்போது பல மணி நேரங்கள் தண்ணீரில் நீச்சலடித்தபடியே மிதந்த ஹரிப்ரியா ஒரு கட்டத்தில் கொஞ்சம் ஆழமான பகுதியில் தம் பிடிக்க முடியாமல் மூழ்கிவிட்டாராம்.

இதைப்பார்த்து பதறிப்போன படக்குழுவினர் நீரில் குதித்து அவரை காப்பாற்றினார்கள். தொடர்ந்து தண்ணீரிலேயே இருந்ததால் கொஞ்சம் சோர்வாகி தன்னால் தம் பிடிக்க முடியாமல் போனதாக சொன்ன ஹரிப்ரியா, அங்கிருந்த அவரது அம்மாவின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் தொடர்ந்து நீச்சல்குள காட்சிகளில் நடித்து கொடுத்தாராம்.

Comments are closed.