எளிமையாக நடந்தது பாவனாவின் திருமணம்..!

226

bhavana maarriage

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.. அதன்பின் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக மாறிய இவர் தமிழ், மலையாள, கன்னடம் என மாறி மாறி நடித்துவந்தார். இந்தநிலையில் கன்னட தயாரிப்பாளர் நவீனுடன் பாவனாவுக்கு காதல் ஏற்பட்டது..

அதன்பின் இருவீட்டாரின் சம்மத்ததுடன் இவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பாவனாவின் திருமணம் இன்று (திங்கள் கிழமை) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்றது. இத்திருமணம் கேரள முறைப்படி எளிமையாக நடைபெற்றது. இத்திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகை ரம்யா நம்பீசன், மிருதுளா முரளி, பாடகி சாயனோரா ஃபிலிப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Comments are closed.