
நரித்தனமான வில்லத்தனம் என்று சொல்வார்களே அந்த மாதிரி வில்லத்தனத்தில் ஒரு புது வெரைட்டி காட்டி ரசிகர்களின் மனதை தொட்டவர் தான் நடிகர் யுகேந்திரன்.. பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் என்கிற சிறப்பு அறிமுகத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த யுகேந்திரன், ஹீராவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்காமல், வில்லன், குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்..
ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் இருந்து பீல்டில் இவரை ஆளையே பார்க்க முடியவில்லை. இடையில் ‘விழா’ என்கிற ஒரு படத்தில் மட்டும் தலை காட்டினார். இவருக்கென தமிழ்சினிமாவில் சில கதாபாத்திரங்கள் காத்துக்கொண்டு இருக்க, எங்கே போனார் யுகேந்திரன் என்கிற கேள்வி பலரின் மனதிலும் இருந்தது.. இப்போது சினிமாவில் தனது மறுபிரவேசத்துக்கான அடியை எடுத்து வைத்துள்ள யுகேந்திரன், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
“சமீபகாலமாக எனக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது, அதன் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் தமிழ்நாட்டிலும் எனது குடும்பம் சிங்கப்பூரிலும் என இருந்ததுதான் எனக்கு பின்னடைவாக இருந்தது. அடிக்கடி நான் என் குடும்பத்தை பார்க்க சிங்கப்பூர் சென்றுவிடுவதாகவும் இதனால் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்வதில்லை என்றும் சிலர் வதந்திகளை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் பொய். நான் என் குழந்தைகளின் விருப்பத்துக்காக மட்டுமே சிங்கப்பூரில் தங்க நேர்ந்தது.” என்கிறார் வெளிபடையாக.
மேலும், “இதனால் சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நான் சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டேன், அதற்கும் சிலர் இனி யுகேந்திரன் இந்தியா வரமாட்டாராம் என்றெல்லம் கதை கட்டிவிட்டுள்ளார்கள். இதோ நான் என் தமிழ் சினிமாவுடன் மீண்டும் இணைய வந்துவிட்டேன். இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் பணத்துக்காக எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்ளாமல். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன்” என்று யுகேந்திரன் கூறியுள்ளார்.
வெல்கம் பேக் யுகேந்திரன்..!
Comments are closed.