சூர்யா படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்..!

230

surya 35 film

சிம்பு நடித்த ‘போடா போடி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்தப்படம் வெளியானபின், இவரிடம் எதோ ஒரு விஷயம் இருக்கிறது என்கிற அளவுக்கு பாராட்டப்பட்டாலும், தனது இரண்டாவது படமாக உருவான ‘நானும் ரவுடி தான்’ படம் மூலமாக ரசிகர்களிடம் அழுத்தமாக பதிந்துவிட்டார்.

அந்தப்படத்தின் வெற்றியால் தற்போது முன்னணி நடிகர்களை இயக்குவதற்கான மார்க்கெட் வேல்யூ அவருக்கு ஆட்டோமேட்டிக்காக உருவாகிவிட்டது.. இதை தொடர்ந்து அடுத்ததாக யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நேரத்தில் இப்போது சூர்யாவின் படத்தை இயக்கவுள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது..

இது சூர்யாவின் 35வது படமாகும்.. நானும் ரவுடிதான் படத்துக்கு இசையமைத்த அணிருத்தே இதற்கும் இசையமைக்கிறார். சூர்யாவுடன் அனிருத்திற்கு இதுதான் முதல் படமாகும். ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. தற்போது சிங்கம்-3யில் நடித்துவரும் சூர்யா அடுத்ததாக இந்தப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

Comments are closed.