தப்பை தட்டிக்கேட்டது சரி தான் ; சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு..!

194

surya 31
நேற்று முன் தினம் முதல் சூர்யா ஒரு வாலிபனை அடித்துவிட்டார் என ஒரு சர்ச்சை தீயாய் கிளம்பி தற்போது முடிவுக்கும் வந்துள்ளது.. அடையாறு பகுதியில் வயதான ஒரு பெண் ஓட்டிய காரின் பின்புறத்தில் தங்களது பைக்கால் மோதியதோடு, அந்த பெண்மணியிடம் பணம் கேட்டு மிரட்டி தரக்குறைவாக நடந்துகொள்ள முயற்சித்தனர் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள்..

ஒரு வாகனத்துக்கும் இன்னொரு வாகனத்துக்கும் குறைந்தது 10 மீட்டர் இடைவெளி விட்டு வரவேண்டும் என சாலை போக்குவரத்து விதியை எதற்காக வைத்திருக்கிறது அரசு…? முன்னால் செல்லும் வாகனம் எதிர்பாராத விதமாக சடன் பிரேக் போட்டாலும் பின்னால் வரும் வாகனம் ஆதன்மீது மோதாமல் இருக்கவேண்டும் என்பதற்குத்தானே..

ஆக தவறு பைக்கில் வந்து மோதிய வாலிபர்கள் மீது இருக்க, அந்தப்பெண் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்தும் கூட, பலர் கூடியிருந்த அந்த இடத்தில் அவருக்கு ஆதரவாக ஒருவரும் வரவில்லை. இந்த நிலையில் தான் அந்த பகுதி வழியாக காரில் சென்ற சூர்யா, நிலைமையை உணர்ந்து காரில் இறந்து அந்த பையன்களை கண்டித்ததோடு, அவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு, தனது நிர்வாகிகளை அங்கே நிறுத்திவிட்டுப்போனார்.

ஆனால் அந்தப்பையன்கள் தாங்கள் தப்பிக்கவேண்டும் என்பதற்காக சூர்யா தங்களை அடித்தார் என போலீசில் பொய்யாக கூறி, சூர்யா மீது வழக்கும் தொடுக்க முயற்சித்தார்கள்.. பின்னர் இப்போது அவர்களாகவே முன்வந்து வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டார்கள்.. இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு ஆளான காரை ஓட்டிவந்த அந்த பெண்மணி சூர்யா மீது எந்த தவறு இல்லையென்றும், ஒரு பெண்ணிடம் அவளை தொட்டு அநாகரிகமாக நடக்க முயன்ற அந்த இரு இளைஞர்களிடம் இருந்து சூர்யா தான் தன்னை காப்பாற்றினார் என்றும் கூறி நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல சூர்யா செய்தது நியாயம் என்று அவருக்குத்தான் ஆதரவுகள் பெருகின.

சூர்யா எப்போதும் இப்படித்தான்.. நல்லது செய்கிறேன் என வீண் பழிக்கு ஆளாவார். யாருக்கோ என்னவோ நடந்துவிட்டு போகிறது.. நமக்கென்ன வந்தது, நாம் ஒரு பிரபல நடிகன், இப்படி பப்ளிக்காக ரோட்டில் இறங்கலாமா என்றெல்லாம் யோசிக்காமல், சாதாரண ஒரு மனிதனாக ஒரு அநீதியை தட்டிக்கேட்க இறங்கியதன் விளைவு இதோ இன்று தேவையில்லாத பழிச்சொல்லுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார்..

இதேபோலத்தான் சமீபத்தில் கூட வெளிநாட்டில் இருந்த தன்னால் தேர்தலில் வாக்களிக்க வரமுடியாத சூழ்நிலை இருப்பதை முன்கூட்டியே கூறி வருத்ததுடன் கடிதம் எழுதினார். உண்மையில் அவரது நேர்மையை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் உள்ளூரில் இருந்துகொண்டே வாக்களிக்காத பல நட்சத்திரங்களை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.. வருத்தப்பட்டு தன்னிலை விளக்க கடிதத்தை முன்கூட்டியே கொடுத்த சூர்யா மட்டும் கெட்டவராகிவிட்டார்.

நல்ல இருக்குய்யா நியாயம்..?

Comments are closed.