மீண்டும் புதியமுகம் காட்ட தயாராகும் சுரேஷ் மேனன்..!

244

suresh menon

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு ஆளாகியுள்ளார் நடிகர் சுரேஷ் மேனன். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘புதியமுகம்’ என்கிரா படத்தை இயக்கி நடித்த சுரேஷ் மேனன், இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம் மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார்.

இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது, ” நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னர் எனக்கு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன.. எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்.

நான் இயக்குவதற்காக புதிய முகம் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருக்கிறேன். அதற்காக நான் அவசரப்படவில்லை. சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் என்னுடைய பயனுள்ள நேரத்தை செல்வழித்து வருகிறேன். கழிவறைகள் வடிவமைப்பது கட்டுவது என சமூக செயல்பாடுகளிலும் பங்கு ஈடுபட்டு வருகிறேன். சமூக வாழ்க்கையின் அனுபவங்கள் எனக்குள் இருக்கும் இயக்குனருக்கும், நடிகருக்கும் சிறப்பான விஷயங்களை கொடுத்து வருகிறது” என்றார் பெருமையோடு

Comments are closed.