
நடிகர் பாண்டியராஜன் காமெடி நடிப்பிலிருந்து ‘அஞ்சாதே’ படம் மூலமாக வில்லனாக மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் அல்லவா..? இப்போது அவரது மகன் பிரித்திவிராஜும் நாயகன் வாய்ப்புதான் வேண்டுமென அடம்பிடிக்காமல் ‘சகா’ என்கிற படத்தில் வித்தியாசமான வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் முருகேஷ் கூறுகையில், “சகா திரைப்படம் குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கும் அவர்களுக்கு வரும் தடைகளையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் அப்படியே காட்டியுள்ளோம்” என்கிறார்.
இப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களால் கடல் படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் ஸ்ரீ ராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது சகா படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.
Comments are closed.