ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி..!

254

kks success

இப்படி ஒரு குடும்ப படம் பார்த்து எத்தனை நாளாச்சு என ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆரவாரமாக கொண்டாடி மகிழும் படமாக 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம்’ வெளியாகியுள்ளது.

இந்தப்படம் கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வெளியாகி குடும்பங்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவோடு அனைத்து சென்டர்களிலும் வெற்றிநடை போட்டுவருகிறது. வெகுநாட்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக இப்படம் வந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று ஓடி வருகிறது.

கடைக்குட்டி சிங்கம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் விநியோகஸ்தகர் “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல் வெற்றியை தந்துள்ள நாயகன் கார்த்தியை சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறியுள்ள கார்த்தி, “கடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்றுக்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. சிலர் தாங்கள் பிரிந்திருந்த தங்களது உறவுகளுடன் மீண்டும் இணைந்துவிட்டதாக எனக்கு அனுப்பும் செய்திகள் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றன.. அண்ணனுடன் இணைந்து நான் நடித்துள்ள இந்தப்படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு நன்றி” என மனம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளார்

Comments are closed.