உத்தரவு போட்டால் எச்ஐவி பயந்துவிடுமா..? ; கரிகாலன் கேள்வி

249

karikalan

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. இந்த கடினமான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது என கூறியுள்ளார் வில்லன் நடிகர் கரிகாலன்.

இதுபற்றி மேலும் அவர் கூறியுள்ளதாவது, “வளரும் இளம் தலைமுறைக்கு நாம் முன் உதாரணமாக திகழ வேண்டும் என விழைகின்றேன். பின் தற்போதைய கணக்கீட்டில் இந்த ஒப்புததலுக்கும் ஓரிரு விழுக்காடாய் இருக்கும். இந்த இயற்கைக்கும், இறைபடைப்புக்கும் மாறான சேர்க்கை பத்து விழுக்காடாய், ஏன் நூறு விழுக்காடாய் மாறக்கூடிய பரிதாப சூழல் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருபால் உறவு தவறு, எச்ஐவியும் பிற பாலின நோய்களையும் வரவைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதே, ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, எச்ஐவி பயந்துவிடுமா ?.

சுதந்திரம்….சுதந்திரம்… சுதந்திரம்… எது சுதந்திரம் ?, பயணத்தில் சிகப்பு விளக்கு எரிந்த பின்னரும் பயணிப்பது சுதந்திரமா ? நெரிசலோ, விபத்தோ ஏற்படாதா ?, இயற்கைக்கு மாறான உறவுப் பயணம் மன நெருக்கடியையோ, மரணத்துக்கு ஏதுவானவற்றையோ நிகழ்த்திவிடாதா, சிந்திப்போம்…சீர்படுத்துவோம்” என கேட்டுக்கொண்டுள்ளார் கரிகாலன்.

Comments are closed.