
நெடுஞ்சாலை, மாயா படங்களைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாகேஷ் திரையரங்கம் என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.’. முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் ஆரி ஜோடியாக ஆஷ்னா சவேரியும் நகைச்சுவைக்கு காளிவெங்கட்டும் முக்கிய வேடங்களில் சீனியர் நடிகைகளான லதா மற்றும் சித்தாராவும் நடிக்கிறார்கள். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மாஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
இப்படத்தை ‘அகடம்’ என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற இசாக் இயக்குகிறார். இன்று பூஜையுடன் தொடங்கி சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. “திரையரங்கை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதையும் களமும் புதிதாக இருக்கும். நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குனர் இஷாக்.
ஒரு காலத்தில் தி.நகரில் பாண்டிபாஜார் சாலையில் பிரபல நடிகர் நாகேஷுக்கு சொந்தமான தியேட்டர் ஒன்று இருந்தது. அந்த இடத்திற்கு ‘நாகேஷ் தியேட்டர்’ ஸ்டாப் என்றுதான் பெயர் என்பது இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு தெரியுமோ என்னவோ..?
Comments are closed.