‘ஆறாது சினம்’ படத்துக்கு U/A சான்றிதழ்..!

240

aarathu sinam

திரையுலகில் ஓரளவு ஸ்திரமாக காலூன்றிய ஒவ்வொரு ஹீரோவுக்கும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும்… அப்படி நடித்தால்தான் தாங்கள் ஹீரோவானதன் பலனை அடைந்ததாக அவர்களுக்கு முழு திருப்தி ஏற்படும். சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அருள்நிதிக்கு அந்த வாய்ப்பு ‘ஆறாது சினம்’ படம் மூலமாக கிடைத்துள்ளது..

இந்தப்படத்தை ‘ஈரம்’ அறிவழகன் இயக்கியுள்ளார். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘மெமோரீஸ்’ என்கிற அதிரடி போலீஸ் கதையை அப்படியே தமிழுக்கு ஏற்ற மாதிரி பக்காவாக மாற்றியுள்ளார். இந்தப்படம் சீரியல் கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் புத்திசாலித்தனத்தை காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருள்நிதியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் வரும் பிப்-26ஆம் தேதி ரிலீஸாகிறது.

Comments are closed.