
அதர்வாவின் அடுத்த ரிலீஸாக வெளியாக காத்திருக்கிறது ‘கணிதன்’. கேத்தரின் தெரசா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை இயக்கியுள்ள டி.என்.சந்தோஷ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அதனாலேயே நேற்று நடைபெற்ற ‘கணிதன்’ பட விழாவுக்கு வந்த முருகதாஸ், தனது சிஷ்யர் உட்பட படக்குழுவினரை வாழ்த்தி பேசியதோடு, பேச்சுவாக்கில் அதர்வாவுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.
“நடிகர் முரளியின் மகன் என்பதால் அதர்வாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். நடிகர் முரளி தமிழ் சினிமாவில் அதிகமாக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர்.. இப்போது அதர்வாவும் அவரது தந்தையை பின்பற்றுகிறார். அதர்வா வருடத்துக்கு ஐந்து படம் நடிப்பதாக வைத்துக்கொண்டால், அதில் மூன்று படங்களில் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கட்டும்.. அதில் இரண்டு படங்களை எனது உதவியாளர்களுக்கு கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
Comments are closed.