“அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க” ; ஆர்.கே.செல்வமணிக்கு ஆலோசனை சொன்ன கமல்..!

247

rk selvamani

தயாரிப்பாளர் சங்கம் தாங்கள் அறிவித்த அறிவிப்பில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.. அதனால் ஆக-1 முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கிவிட்டது பெப்சி அமைப்பு.. இதுகுறித்து போராட்டத்தின் முதல் நாளான நேற்று நிருபர்களிடம் தங்கள் தரப்பு நியாயத்தையும் போராட்டத்திற்கு காரணம் தாங்கள் இல்லையென்பதையும் விளக்கினார் பெப்சி தலைவரான ஆர்.கே.செல்வமணி..

இது போன்று ஒரு பிரச்சனையை, அதாவது பெப்சி தொழிலாளர்களுடன் முரண்பட்ட ஒரு சூழ்நிலை 20 வருடங்களுக்கு முன்பே ‘காதலா காதலா’ படத்தின்போது ஏற்பட்டது.. அப்போதே பெப்சியின் அடாவடியை கண்டித்தவர்தான் கமல்.

சமீபத்தில் தற்போதைய தயாரிப்பாளர் சங்க அறிவிப்பையும் பெப்சியின் வேலைநிறுத்த போராட்ட முடிவையும் பற்றி கமலின் வீட்டிற்கே சென்று விவாதித்து ஆலோசனை கேட்டுள்ளார் ஆர்.கே.செல்வமணி… அதற்கு கமல், “இப்போது திரையுலகம் சிக்கலான சூழலில் இருக்கிறது செல்வமணி.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க” என கூறினாராம் கமல்.

ஆனால் அதை ஆர்.கே.செல்வமணி தரப்பினர் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்பது இந்த ஸ்ட்ரைக் மூலம் தெளிவாகியுள்ளது. ஆர்.கே.செல்வமணி செயலாளராக அங்கம் வகிக்கும் இயக்குனர் சங்கமும் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், நடன இயக்குனர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.