இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான்.
அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று, அதன் பெற்றோர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சண்டையினால் சரியான கவனிப்பின்மை காரணமாக இறந்து பேயாக மாறுகிறது.. அதன்பின் தனது இந்த நிலைமைக்கு காரணமான தனது பெற்றோருக்கு அது பாடம் புகட்டுகிறதா, இல்லை பாவம் என விட்டுவிடுகிறதா என்பதை மையமாக வைத்து ‘ஓவியா’ என்கிற படம் தயாராகிறது.
காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். மலையும் மலைசார்ந்த இடமும் தான் கதைக்களம் என்பதால் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு நடைபெற்று வருகிறது.

Comments are closed.