சில மாதங்களுக்கு முன்பு பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ‘சேவ் சக்தி’ என்கிற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார் நடிகை வரலட்சுமி.. ஏதோ ஆர்வக்கோளாறில் இப்படி பண்ணுகிறார் என்று நினைத்தவர்கள பலரையும் தனது தொடர்ந்த செயல்பாடுகளால் வாயடைக்க செய்த வரலட்சுமி, இந்த அமைப்பின் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அதை ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார்..
இந்த அமைப்பின் மூலம் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்களை ஆரம்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்ப்புகள் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சேவ் சக்தி அமைப்பினர் கடந்த திங்களன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், செவ்வாய் அன்று மாநில சட்ட அமைச்சர் பி.பி.சவுத்ரியையும் அவர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர். முதல்வரிடம் கோரிக்கை வைத்தபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மகிளா நீதிமன்றங்கள் மீது அதிக கவனம் செலுத்தினார் என்பது பற்றியும் தெளிவாக விளக்கினர்.
அதற்கு பதிலாக மாநில அரசு நிச்சயம் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பதிலளித்து உள்ளனர். மாநில சட்ட அமைச்சரிடம் கோரிக்கை வைத்த போது மகிளா நீதிமன்றங்கள் நாடு முழுவதும் சிறப்பாக இயங்க தாம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்..

Comments are closed.