தேசிய விருது, மாநில அரசு விருதுகளுக்கு அடுத்தபடியாக திரையுலகினர் மிகப்பெரிதும் மதிக்கும் எதிர்பார்க்கும் விருதுதான் பிலிம்பேர் விருது.. இந்தவருடம் நடைபெறவுள்ள 64வது பிலிம்பேர் விருதுக்கான பொய்யில் கலந்துகொள்ள தமிழில் இருந்து அனுப்பப்பட்ட படங்களில் இருந்து இறுதியாக ஒவ்வொரு பிரிவிலும் போட்டியிட நாமினேட் செய்யப்பட்ட 5 இடங்களை உறுதி செய்துள்ளது பிலிம்பேர் விருது கமிட்டி.
இதில் சூர்யா நடிப்பில் உருவான ‘24’ படம் ஏழு பிரிவுகளில் போட்டியிட நாமினேட் செய்யப்பட்டுள்ளது..சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (சமந்தா), சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த குணச்சித்திர நடிகை (நித்யா மேனன்), சிறந்த பாடகி (சின்மயி- நான் உன்), சிறந்த பாடகர் (சித் சங்கர் – மெய்நிகரா), சிறந்த பாடலாசிரியர் (மதன் கார்க்கி – நான் உன்) என இவைதான் இந்தப்படம் நாமினேட் செய்யப்பட்டுள்ள ஏழு பிரிவுகள்..
சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த ஒளிப்பதிவாளராக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் திருவுக்கும் சிறந்த தயாரிப்பு நிர்வாகத்திற்காக (அமித்ராய் & சுபத்ரா ராய்) ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.