விநியோகஸ்தர்களை மேடையேற்றி கௌரவித்த உதயநிதி..!

202

saravanan irukka bayamen thanks meet

கடந்த வாரத்தில் உதயநிதி நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் வெளியானது.. இயக்குனர் எழில் இயக்கிய இந்தப்படத்தில் ரெஜினா, சூரி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. பாகுபலி-2 அலை பயங்கரமாக வீசிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தப்படத்தை வெளியிட்டு உதயநிதி ரிஸ்க் எடுத்தார்..

அவர் என்ன கணக்கிட்டு படத்தை ரிலீஸ் செய்தாரோ, படத்தின் வசூலும் வரவேற்பும் அவரை கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை. இதற்கு தெளிவான திட்டமிடுதல் இருந்தாலும் கூட, படத்தை வாங்கி திரையிட்ட விநியோகஸ்தர்கள் பாகுபலிக்கு அடுத்ததாக இந்தப்படத்திற்கு போதுமான தியேட்டர்களை அளித்து படத்தை வெற்றிப்பாதைக்கு திருப்பிவிட்டதும் முக்கிய காரணம்.

இந்தப்படம் வெற்றி பெற்றதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்திய உதயநிதி, படக்குழுவினருடன் இந்தப்படத்தை முக்கிய நகரங்களில் வெளியிட்டு வெற்றிப்படமாக்கிய சில விநியோகஸ்தர்களையும் மேடையேற்றி நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தினார்.

Comments are closed.