மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே ரஜினியை சந்திக்க அனுமதி..!

224

rajini fans meet 1

கடந்த பத்து ஆண்டுகளாக தங்களது தலைவரை சந்திக்க வேண்டி அனைத்து ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கி கடந்த ஏப்ரல் 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ரசிகர்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்வதைவிட ரஜினியுடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொள்வதில் தான் அவர்களுக்கு விருப்பமென்று தெரிவித்ததால், அப்போதைக்கு அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு மாற்று தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நாளை (மே-15) முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி. தவிர ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும் என மன்றத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.