மியூசியத்தில் குத்துவிளக்கு தீட்டிய கீர்த்தி சுரேஷ்..!

197

keerthy suresh in Live Art Museum

உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக சென்னையில் உருவாகி உள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்.

அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வடிவமைக்க முடிவெடுத்த பின் அதற்கென நிறைய நுணுக்கமான விஷயங்களை சேகரித்து, விவாதித்து ஆராய்ந்து சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

விஜிபி ஸ்னோ கிங்டம் உள்ளே அமைந்துள்ள இந்த சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் இன்று குத்துவிளக்கு “தீட்டி” துவக்கி வைத்தார். அதாவது ஆளுயர குத்து விளக்கு ஓவியத்தில் தூரிகையால் தீபம் ‘தீட்டி’ மியூசியத்தை துவக்கி வைத்தது ரசனையாகவும், புதுமையாகவும் இருந்தது.

துவக்கி வைத்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. ஸ்ரீதர் சார் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்..” என்று பேசினார் கீர்த்தி சுரேஷ்

Comments are closed.