அடுத்தடுத்து 2 பட ரிலீஸ் ; ஆகஸ்ட்-செப்டம்பரில் விஷாலின் அதிரடி..!

223

vishal 2 films

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலைகளுக்காக பாதி நேரத்தை ஒதுக்கினாலும் தனது படங்களின் பணிகள் பாதிக்காதவாறு கால்ஷீட்டுகளை கையாள்கிறார் விஷால். அந்தவகையில் தற்போது மிஷ்கின் டைரக்சனில் துப்பறிவாளன் படத்திலும் மித்ரன் டைரக்சனில் இரும்புத்திரை படத்திலும் நடித்து வருகிறார் விஷால்..

இதில் துப்பறிவாளன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.. துப்பறியும் த்ரில்லர் படமாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தை ஆக-11ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் விஷால். அதை தொடர்ந்து இரும்புத்திரை படத்தின் இசை வெளியீட்டை ஆக-29ல் நடத்திவிட்டு, அந்தப்படத்தை செப்-28ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார் விஷால்.. ஆக, ஆகஸ்ட்-செப்டம்பரில் விஷாலின் விஸ்வரூபத்தை தரிசிக்கலாம் என்றே தெரிகிறது.

Comments are closed.