மோகன்லால் படத்தில் டைட்டில் ரோல் விஷாலுக்குத்தான்..!

287

villain vishal

முதன்முறையாக மலையாலத்திரையுலகில் நுழைந்திருக்கிறார் விஷால். அதுவும் மோகன்லால் நடிக்கும் படத்தில்.. இந்தப்படத்தில் விஷாலுக்கு பவர்புல்லான வில்லன் வேடம் என்று சொல்லப்பட்டாலும் இதுவரை அது உறுதியில்லாத தகவலாகவே தெரிகறது.. ஆனால் அந்த தகவல் உண்மையாக இருக்குமோ என்பதை உறுதி செய்யும் விதமாக படத்தின் டைட்டிலை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

ஆம்.. இந்தப்படத்திற்கு ‘வில்லன்’ என இப்போது டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மோகன்லால் இந்தப்படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் நிச்சயமாக இந்த டைட்டில் அவருக்கு பொருந்தாது.. அதனால் விஷாலின் கேரக்டரை மையப்படுத்தியே இந்த டைட்டில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூட சொல்லலாம்.

இல்லையென்றால் வில்லன் என டைட்டில் வைத்து தமிழில் அஜித் ஹீரோவாகத்தானே நடித்தார், அந்த மாதிரி மோகன்லாலுக்கு இந்த டைட்டில் ரோல் பொருந்த வாய்ப்பிருக்கிறது.. அனேகமாக சீக்கிரமே இந்த ரகசியம் உடையும்… அப்போது பார்க்கலாம்.

Comments are closed.