பிப்-24ல் வெளியாகும் ‘கார்டியன்ஸ் ; தி சூப்பர் ஹீரோஸ்’ – ஒரு சிறப்பு பார்வை

217

Guardians-The-Superheroes release 2
ரஷியாவில் புகழ் பெற்ற பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ திரைப்படம தான் ‘கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவில் வெளிவரவுள்ளது. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தை ‘மாபியா, ‘அமெரிக்கன் ஹெய்ஸ்ட் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய அர்மேனிய இயக்குநர் சரிக் அண்ட்ரியாசியான் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் சூப்பர் ஹீரோ நட்சத்திரங்களாக ரஷ்ய நடிகர்கள் அலினா லணினா, செபஸ்டின் சிசக், சன்சார் மதியேவ் மற்றும் ஆண்டன் பம்புஷ்னி ஆகியோர் நடித்துள்ளனர். இது உலக அளவில் வெளிவந்த மிக சிறந்த சூப்பர் ஹரோ படங்களுள் ஒன்றாகும். ஹாலிவுடில் வெளிவரும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு இணையாக அதே போல் மிக சிறந்த தரத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகள் இந்திய சூப்பர் ஹீரோ சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ் திரைப்படத்தின் இந்திய உரிமையை மூவிவேல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப்பிரவரி மூன்றாம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இத்திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.

கார்டியன்ஸ் பட்டியலில் இடம்பிடிக்கும் இந்த சூப்பர் ஹீரோக்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா.?

அர்சுஸ் ;

எதிரிகளை தூள்தூளாக்கு என்கிற தாரக மந்திரம் கொண்டவன்.. நினைத்த மாத்திரத்தில் தன்னை மிகப்பெரிய கரடியாக உருமாற்றம் செய்துகொள்பவன். அதேசமயம் எந்த அளவுக்கு உருமாறவேண்டும் என்கிற சுய கட்டுப்பாட்டையும் தன்னிடத்தே கொண்டிருப்பவன்.. இவனுடைய ஆயுதம் ஒரு மினி கன்.. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆண்டன் பம்புஷ்னி

செனியா ;

தண்ணீர்ப்பெண் என்று இவரை தாராளமாக சொல்லலாம். தன்னை தற்காத்துக்கொள்ளவும் எதிரிகளை தக்காவும் தண்ணீரை ஆயுதமாக்கி சாகசம் செய்யும் பெண் தான் செனியா.. இந்த கேரக்டரில் நடித்திருக்கிறார் அலினா லணினா

லெர் ;

நில மனிதன் எனப்படும் இவன் நிலத்தை துல்லியமாக கையாள தெரிந்தவன்.. கல்லையும் மண்ணையும் கட்டுப்படுத்துபவன் பாறைகள் விழுவதை தடுத்து நிருத்துப்பான, மலைகளையே நகர்த்திவிடும் வல்லமை படைத்தவன்.. ஒரு சாங்கியில் ஒரு பெரிய பாறை ஒன்றை பிணைத்து அதை ஆயுதமாக பயன்படுத்துபவன் தான் இந்த லெர்.. இந்த கேரக்டரில் செபாஸ்டியன் சிசாக் என்பவர் நடித்துள்ளார்.

கான் ;

இவனை காற்று மனிதன் என்று சொல்லலாம். எல்லாவகையான வீரதீர கலைகளும் அறிந்தவன். வேகமும் சுறுசுறுப்பும் கொண்ட சூப்பர் மனிதன்.. தியான நிலையிலும் கூட சுற்றி நடப்பதை பகுத்தறியும் திறன் கொண்டவன்.. இரட்டைப்பிறை வடிவிலான கூர்மையான ஆயுதம் ஒன்றை வைத்திருப்பவன்.. இந்த கேரக்டரில் சன்சார் மதியேவ் என்பவர் நடிக்கிறார்..

இந்த சூப்பர் ஹீரோக்கள் தவிர சூப்பர் வில்லன் ஒருவரும் இருக்கிறான்.. அவன் தான் அகஸ்ட் குரடோவ்.. மாஸ்கோவை பிடிப்பதற்காக சொந்தமாக தனி ராணுவத்தையே வைத்திருப்பவன். தன் கைவசம் வைத்துள்ள ‘மாடுல்-1’ என்கிற மெஷினை வைத்து அதன்மூலம் மின்சதியை உருவாக்கி எந்தவித தொழிநுட்ப சாதனங்களையும் கட்டுப்படுத்த கூடியவன்.. நில மனிதன் லெர்க்கே சவால் விடக்கூடிய வல்லமை வாய்ந்தவன்.. இந்த கேரக்டரில் ஸ்டானிஷ்லவ் ஷிரின் என்பவர் நடித்துள்ளார்.

Comments are closed.