சில வருடங்களுக்கு முன் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படத்தில் நகைச்சுவை நடிகர் சார்லி பேசிய ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ என்கிற புகழ்பெற்ற வசனம் இன்று ஒரு படத்தின் டைட்டிலாகவே மாறியுள்ளது.
காதல்’ படம் மூலம் நகைச்சுவை நடிகனாக பிரபலமான ‘காதல்’ சுகுமார் ‘திருட்டு விசிடி’, ‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இயக்கும் படம் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’. இந்தப்படத்தின் கதாநாயகனாக ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அபிசரவணன், விஷ்ணுப்ரியன் மற்றும் காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
கதாநாயகிகளாக கன்னிகா ரவி, ஸ்ருதி, ஹர்ஷதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சௌந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ‘பொறம்போக்கு’ படத்திற்கு இசையமைத்த வர்ஷன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்டு. வாழ்க்கையில் அடுத்தடுத்து தொடர்ந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் ஒருவன் அதில் இருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
கேரளாவில் ஆரம்பித்து கோவையில் முடியும் இந்தப்படத்தின் கதை ஏழு நாட்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.. பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கவிழா நேற்று மாலை கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரையுலக கலைஞர்களும் கோவையை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

Comments are closed.