ரஷ்ய சூப்பர் ஹீரோக்களான ‘கார்டியன்ஸ்’ தமிழில் பிப்-24ல் ரிலீஸ்..!

210

gaurdians the superheroes 1

ரஷியாவில் புகழ் பெற்ற பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ திரைப்படமான “கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவில் வெளிவரவுள்ளது. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள சரிக் அண்ட்ரியாசியான் ஏற்கனவே, ‘மாபியா’, அமெரிக்கன் ஹெய்ஸ்ட் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியவர.

இப்படத்தில் சூப்பர் ஹீரோ நட்சத்திரங்களாக ரஷ்ய நடிகர்கள் அலினா லணினா, செபஸ்டின் சிசக், சன்சார் மதியேவ் மற்றும் ஆண்டன் பம்புஷ்னி ஆகியோர் நடித்துள்ளனர். இது உலக அளவில் வெளிவந்த மிக சிறந்த சூப்பர் ஹரோ படங்களுள் ஒன்றாகும். ஹாலிவுடில் வெளிவரும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு இணையாக அதே போல் மிக சிறந்த தரத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments are closed.