ஒரு அரசியல் தலைவரின் மகனாக இருந்தாலும் தன்னை எந்த இடத்திலும் ஒரு அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர் உதயநிதி ஸ்டாலின். தன் தாத்தாவின் அடியொற்றி சினிமாதான் தனது எதிர்காலம் என தீர்மானித்த உதயநிதி ஆரம்பத்தில் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறி தமிழ்சினிமாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
எடுத்த எடுப்பிலேயே நானும் ஹீரோ தான் என டாப் கியரை தூக்காமல் திரைப்பட வினியோகம், தயாரிப்பு என சினிமாவின் சூட்சுமங்களை ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதே சினிமாவின் மீதான அவரது நேசிப்பு தெரிய ஆரம்பித்தது.
ஒருபக்கம் விஜய், சூர்யா, ஆர்யா என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தாலும் இன்னொரு பக்கம் சிறிய பட்ஜெட்டில் தயாரான நல்ல படங்களையும் வாங்கி கைகொடுத்து தூக்கிவிடும் பணியையும் சரியாகவே செய்துவந்தார்
நல்ல கதைகள் கிடைத்தால் ஹீரோவாக நடிக்கலாம் என்று நினைத்தவருக்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சரியான மேடை போட்டுக் கொடுத்தது. தனக்கு எது செட் ஆகுமோ அதிலிருந்து ஒரு இஞ்ச் கூட மீறாமல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் உதயநிதி தற்போது லைக்கா புரொடக்சன் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் டைரக்சனில் உருவாகும் படத்தில் நடித்துவருகிறார்.
இன்று உதயநிதியின் பிறந்தநாள்.. என்றாலும் அதற்காக தனி கவனம் செலுத்தாமல் வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்துகொண்ட உதயநிதி, படப்பிடிப்பு தளத்திலேயே சூரி, மஞ்சிமா உள்ளிட்டவர்களுடன் எளிமையாக தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இன்று பிறந்தநாள் காணும் உதயநிதிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.