ஹேப்பி பர்த்டே வெங்கட்பிரபு..!

208

vengat-prabhu

இளையராஜா-கங்கை அமரன் என்கிற இசைக்குடும்பத்தில் வாரிசாக வந்தாலும், தனது தந்தை கங்கை அமரனிடம் இருந்து டைரக்சன் என்கிற ஜீனை மற்றும் பெற்றுக்கொண்டு இயக்குனராக மாறி, அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தவர் வெங்கட்பிரபு.. ‘சென்னை-28’ படம் தொடங்கி, தொடர்ந்து புதிய பாணியிலான படங்களை இயக்கி, முன்னணி இயக்குனராகவும் உயர்ந்தார்.

அஜித்துடன் இணைந்து அவர் ஆடிய ‘மங்காத்தா’ லைப் டைம் ரெக்கார்டாகவே மாறிப்போனது. வெங்கட் பிரபு தனது படங்களுக்கான கதைக்களத்திற்காக மட்டுமல்ல.. அதில் நடிக்கும் முக்கியமான கேரக்டர்களை தேர்வு செய்வதிலும் அசகாய சூரர். அந்த வகையில் அடுத்து ஒரு மெகா ஹிட் கொடுக்கவேண்டும் என தீவிர முயற்சியில் தற்போது ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தை இழைத்து இழைத்து உருவாக்கி கொண்டிருக்கிறார்.

இன்று பிறந்தநாள் காணும் வெங்கட் பிரபுவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.