கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த ஸ்டுடியோகிரீன்..!

212

keerthi-suresh-in-tsk-1

தமிழ்சினிமாவில் ஒரு அறிமுக நடிகைக்கு அறிமுகமான முதல் வருடத்திலேயே இவ்வளவு புகழ் கிடைத்திருக்கிறது என்றால் அது நடிகை கீர்த்தி சுரேஷுக்காகத்தான் இருக்கும். சீனியர் நடிகை மேனகாவின் மகள் என்பதுடன் நன்றாக தமிழ் பேசவும் தெரிந்தவர் என்பதாலோ என்னவோ ரசிகர்களுக்கு இவரை எளிதில் பிடித்துப்போனது..

அதற்கேற்றமாதிரி கடந்த பொங்கலன்று வெளியான ‘ரஜினி முருகன்’ படத்தில் ‘ஒம்மேல ஒரு கண்ணு’ என பாட்டு பாடி, ஒரு கண் சிமிட்டல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த கீர்த்தி, சமீபத்தில் வெளியான ‘ரெமோ’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது வீச்சை இன்னும் அதிகமாக்கியுள்ளார்.

இன்னொரு பக்கம் ‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் ஜோடிசேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இயல்பாகவே தேடிவர, அறிமுகமான முதல் வருடத்திலேயே முன்னணி நடிகையாகும் யோகம் கீர்த்தி சுரேஷுக்கு வாய்த்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இதோ அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.. ஆம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் கதாநாயகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்..

இது அவருக்கு கிடைத்த பரிசு.. பிறந்தநாள் பரிசு.. ஆம்.. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தங்களது படத்தின் கதாநாயகியாக அவரை அறிவித்து பரிசளித்திருக்கிறது ஸ்டுடியோகிரீன் நிறுவனம்.. இன்று பிறந்தநாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு நமது behind frames சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments are closed.