
பொதுவாக தனது படங்களால் எந்தவித சர்ச்சைகளும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் விஜய் ஆண்டனி.. ஆனால் தற்போது அவர் நடித்துள்ள ‘சைத்தான்’ படத்தின் டீசரில் வரும் “சன்னோ விஷ்ணு ருருக்ரம: என்ற மந்திரத்தை “விஷ்ணு சைதானே” என்று ஒலிக்கும்படி செய்திருக்கிறார். இதற்கு இசையமைத்தவரும் அவரேதான்.. பாடலை எழுதியவர் சமீபத்தில் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலை.
ஆனால் இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ யூடியூப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த டீசரை இன்று நீக்கிவிட்டதாகவும் புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து, நாளை மாலை 7 மணிக்கு சைத்தான் படத்தின் புதிய டீசர் வெளியிடப்படும் என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Comments are closed.