பிருத்விராஜை தொடர்ந்து விஜய்சேதுபதியும் புதிய சாதனை..!

261

vijay-sethupathi-films

பல மாதங்கள் இடைவெளியில் விஜய்சேதுபதியின் படங்கள் தயாரானாலும் அவற்றின் ரிலீஸ் தேதிகள் மட்டும் ஒன்றுக்கொன்று வெகு நெருக்கத்தில் அமைந்துவிட்டன. அந்தவிதமாக சமீபத்தில் அவர் நடித்த தர்மதுரை, அதைதொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் வெளியாகின.. தர்மதுரை படத்தின் வெற்றியால் இன்னும் அந்தப்படம் நிறைய தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது..

வரும் வெள்ளியன்று விஜய்சேதுபதியின் இன்னொரு படமான ‘றெக்க’யும் ரிலீசாக இருக்கிறது. ஆக விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் ஒரேசமயத்தில் தியேட்டர்களில் ஓடும் ஒரு ஆச்சர்யமான சூழலை தமிழ் திரையுலகம் பார்க்கப்போகிறது. குறிப்பாக சத்யம் தியேட்டரில் இந்த மூன்று படங்களும் வரும் வெள்ளியன்று ஓடப்போகின்றன.

கடந்த 20 வருடங்களில் கணக்கெடுத்து பார்த்தால் விஜய்சேதுபதி மட்டும் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் என அடித்து சொல்லலாம்.. ஆனால் மலையாளத்தில் இதே வருடம் நடிகர் பிருத்விராஜ் இதைவிட ஒரு படி தூக்கலான சாதனையை செய்துள்ளார்.. ஆம் இந்த வருடம் ஜனவரி-15ஆம் தேதியன்று வரிசையாக சீரான இடைவெளியில் வெளியான அவரது நான்கு படங்கள் ஒரே நகரத்தின் வெவ்வேறு தியேட்டர்களில் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.