சூர்யாவுக்காக ‘தானா சேர்ந்த கூட்டம்’..!

230

thana-serntha-koottam-1

சூர்யாவின் சிங்கம்-3’ படம் டிச-16ஆம் தேதி ரிலீஸாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்ட கையோடு, அடுத்ததாக விக்னேஷ் சிவன் டைரக்சனில் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலையும் அறிவித்துவிட்டார்கள்.. படத்திற்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரிக்கின்றன.

விக்னேஷ் சிவனின் முந்தைய பட டைட்டிலான ‘நானும் ரவுடி தான்’ என்பது தலைநகரம் படத்தில் வடிவேலு பேசும் காமெடி டயலாக்கில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது.. இந்தப்படத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்கில் இருந்து டைட்டிலை எடுத்திருக்கறார் விக்னேஷ் சிவன்.. இதுபோன்று புகழ்பெற்ற வசனத்தில் இருந்து எடுத்து வைக்கப்படும் டைட்டிலில் சூர்யாவின் படம் உருவாவது இதுதான் முதன்முறை.

Comments are closed.