“எவன் நெனச்சாலும் என்ன புடிக்க முடியாது” ; விஷால் சவால்..!

213

kathi-cahandai-1
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்ன இணைந்து நடித்துவரும் படம் தான் ‘கத்திச்சண்டை’ இந்தப்படத்தில் வடிவேலு-சூரி என்கிற புதிய கலக்கலான காமெடி காம்பினேஷன் உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக விஷால்- தமன்னா இருவரும் பங்குபெற்ற “குட்டி குட்டி நெஞ்சிலே காதல் வந்ததும் நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே“ என்ற பாடல் காட்சி நடன இயக்குனர் ராதிகா நடன அமைப்பில் ஜார்ஜியாவில் படமாக்கப் பட்டது.

அத்துடன் விஷால் மட்டும் பங்குபெற்ற “எவன் நெனச்சாலும் என்ன புடிக்க முடியாது“ என்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. காமெடிக்கும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த கத்திசண்டை வருகிற தீபாவளி அன்று உலகமுழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் சுராஜ்.

Comments are closed.