சோஷியல் மீடியா குற்றங்களை தட்டிக்கேட்க ஒரு படம்..!

210

Kadhale Vendaam Saami
சமூக வலைத்தளங்களில் ஏற்படும் அவலநிலையை தட்டி கேட்கும் ஒரு சட்டக்கல்லூரி மாணவனை மையமாக வைத்து உருவாகும் படம் தான் காதலே வேண்டாம் சாமி’. இப்படத்தின் கதாநாயகனாக அபிஷ் என்பவர் அறிமுகமாகிறார் .கதாநாயகியாக மவுமிதா நடித்துள்ளார். .இப்படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் யாசர் .

சட்டக்கல்லூரியில் படிக்கும் சகமாணவன் ஒருவன் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறான் .தட்டிக்கேட்கும் கதாநாயகன் அவனுக்கு கல்லூரி மைதானத்தில் பெரிய தண்டனை தருகிறான் . வில்லன் அரசியல் பலம், பணபலத்தை பயன்படுத்தி கதாநாயகனை பெரிய சிக்கலில் மாட்டிவிடுகிறான். கதாநாயகன் அதிலிருந்து மீண்டுவந்தானா ? என்பதுதான் படத்தின் கதையாம். சமூகத்தில் தற்போது நடக்கும் அவலங்களை பிரதிபலிக்கும் விதமாக திருநங்கைகள் மூலம் பாடும் ஒரு பாடல் காட்சியாக்கப்பட்டுள்ளது

Comments are closed.