சாமி-2 விரைவில் ஆரம்பம் ; ஹரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

233

saamy

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த போலீஸ் படங்களை பட்டியலிட்டால் அதில் முதல் பத்து படங்களில் ‘சாமி’க்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.. ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த இந்தப்படம், ஒரு போலீஸ் படம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என பாடம் நடத்தியது. இதன் மிகப்பெரிய வெற்றி விக்ரமை ஆக்சன் ஹீரோவாகவும் மாற்றியது.

அந்தப்படத்தின் கிளைமாக்ஸில் ‘சாமி’யின் வேட்டை தொடரும் என முடித்திருந்த ஹரி இரண்டாம் பாகமும் இருக்கிறது என்பதற்கான குறிப்பையும் கொடுத்திருந்தார்.. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்..

இதற்கான பதிலை இன்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார் ஹரி.. இன்று நடைபெற்ற விக்ரமின் ‘இருமுகன்’ இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஹரி, சிங்கம்-3யை முடித்ததும், அடுத்ததாக ‘சாமி-2’வுக்காக தானும் விக்ரமும் இணைவதாக கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இருமுகன் படத்தை தயாரித்துள்ள சிபு தமீன்ஸ் தான் இந்தப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார்..

Comments are closed.