தடதடவென முன்னேறும் சாந்தினி..!

223

Chandini

இன்றைய நிலையில் தமிழ்சினிமாவில் அதிகப்படங்களில் நடித்து வரும் நடிகை யார் தெரியுமா..? நயன்தாரா..? கீர்த்தி சுரேஷ்..? நில்லா நிக்கி கல்ராணியா..? ம்ஹூம்.. இவர்களில் யாரும் இல்லை. பாக்யராஜால் சியா வருடங்களுக்கு முன் ‘சித்து ப்ளஸ் 2’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானாரே அந்த சாந்தினி தான் அதிகப்படங்களில் நடித்து வரும் நாயகி.. இவர நடித்துவரும் படங்களின் பட்டியலை பார்த்தாலே மலைப்பு ஏற்படுகிறது.

பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமலுடன் “மன்னர் வகையரா”, சிபிராஜுடன் “கட்டப்பாவை காணோம்”, பரத்துடன் “என்னோடு விளையாடு”, வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனாவின் இயக்கத்தில் “பல்லாண்டு வாழ்க”, நடன இயக்குனர் கௌதம் இயக்கத்தில் “கண்ணுல காச காட்டப்பா”, இயக்குனர் அமீரின் தயாரிப்பில் “டாலர் தேசம்”, “தாமி”, கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடித்த சந்தோஷுடன் “நான் அவளை சந்தித போது”, நவின் கிருஷ்ணா, கீர்த்தி சுரேஷுடன் “அய்னா இஷ்டம் நூவு” எனும் தெலுங்கு படம் என வித்தியாசமான கதைகளங்கள் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார் சாந்தினி

Comments are closed.