
‘மங்காத்தா’ படத்துக்குப்பின் அர்ஜுனுக்கும் ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்துக்குப்பிறகு ஷாமுக்கும் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அந்தக்குறையை போக்கும் விதமாக ‘ஒரு மெல்லிய கோடு’ படம் இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ்..
இந்தப்படம் பலதரப்பட்ட பிரச்சனைகளிலிருந்து மீண்டு. ஒருவழியாக வரும் ஜூலை-1ஆம் தேதி ரிலீஸாகிறது. இசைஞானி இளையராஜா இசையமைப்பது இந்தப்படத்துக்கு கூடுதல் பலம். முதல்வன் படத்திற்குப்பின் நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ளார் மனீஷா கொய்ராலா. கதாநாயகியாக அக்சா பட் நடித்திருக்கிறார்.
Comments are closed.